வெளி மாநிலங்களில் இருந்து பத்து ரயில்களில் தொழிலாளர்களை ஏற்றி வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மேற்கு வங்க மாநில உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ரயில்களில் அழைத்துச் செல்ல மேற்கு வங்க அரசு போதிய ஆதரவளிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டி இருந்தார்.
இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் சாடியிருந்தார். இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து பத்து ரயில்களில் தொழிலாளர்களை ஏற்றி வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மேற்குவங்க மாநில உள்துறைச் செயலாளர் ஆலாபன் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் இருந்து புறப்பட்ட ரயில் ஞாயிறன்று மால்டாவை வந்தடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாநிலத்துக்குள் காரில் வருவதற்கு ஆறாயிரம் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.