குஜராத் கிர் வனப்பகுதியில் 3 மாதங்களில் 23 சிங்கங்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூனாகத் மாவட்டத்தின் கிர் காடுகளில் ஆசிய சிங்கங்கள் அதிக அளவில் வாழ்கின்றன. இந்தியாவில் சிங்கம் அதிகமாக வாழும் பகுதி கிர் காடுதான். கிர் வனப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டிருந்தன. இந்நிலையில் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் காரணமாக தற்போது 23 சிங்கங்கள் வரை உயிரிழந்துள்ளன. சில ஒட்டுண்ணியால் பே பே சியோசிஸ் என்ற வைரஸ் பரவியதால் சிங்கங்கள் உயிரிழந்திருக்கலாம் என ஜூனாகத் மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.