தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களை மேற்கு வங்கத்துக்குள் அனுமதிக்க மாநில அரசு மறுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள மேற்குவங்கத் தொழிலாளர்கள் 2 லட்சத்துக்கு மேற்பட்டோரைத் திருப்பி அனுப்புவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு மாநில அரசிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மேற்கு வங்கத்துக்குள் செல்ல மாநில அரசு அனுமதிக்கவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், இது அவர்களின் துன்பத்தை மேலும் அதிகமாக்கும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.