ஊரடங்கு காரணமாக சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாயை உடனடியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ள நிலையில், இது பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சிஐஐ அமைப்பு கணித்துள்ளது. இத்தகைய சூழலில், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவேண்டும் எனவும், ஜன் தன் வங்கி கணக்கு வாடிக்கையாளர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கவும் சிஐஐ பரிந்துரைத்துள்ளது.