இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு பாதியாகக் குறைந்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 99 லட்சத்து முப்பதாயிரம் டன் பெட்ரோலியப் பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இது 45 புள்ளி 8 விழுக்காடு குறைவாகும். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது டீசல் விற்பனை 55 புள்ளி 6 விழுக்காடும், பெட்ரோல் விற்பனை 60 புள்ளி 6 விழுக்காடும் குறைந்துள்ளன.
அதே நேரத்தில் சமையல் எரிவாயு விற்பனை 12 புள்ளி ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது. சாலை அமைக்கப் பயன்படும் தாரின் பயன்பாடு 71 விழுக்காடும், எரி எண்ணெய் பயன்பாடு 40 விழுக்காடும் குறைந்துள்ளன. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு 5 புள்ளி ஆறு விழுக்காடு வீழ்ச்சியடையும் எனப் பன்னாட்டு எரியாற்றல் முகமை கணித்துள்ளது.