கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியிலான பிரச்னையை சரி செய்ய 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடிதம் எழுதியுள்ளார்.
சத்தீஸ்கரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொழிற்சாலைகள் உள்ளிட்டவை செயல்பட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநில அரசுக்கு வரி மூலம் கிடைத்த வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பொருளாதார ரீதியான பிரச்னையை சரி செய்ய 30 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டுமென கோரியுள்ளார். இந்த நிதியில் 10 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக அளிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.