ஆயுர்வேத மருந்தான அஸ்வகந்தாவை கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.
பாரம்பரிய இந்திய பாரம்பரிய வைத்திய முறைகள் கொரோனாவை தடுப்பதில் எத்தகைய பலனளிக்கின்றன என்ற பரிசோதனையில் ஆயுஷ் அமைச்சகமும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் இணைந்து ஈடுபட உள்ளன.
அஸ்வகந்தா, அதிமதுரம், சீந்தில் கொடி,மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்-64 மருந்து கலவை ஆகியவை கொரோனாவை எதிர்க்கும் வல்லமை படைத்தவையா என ஆய்வு செய்யப்படும்.அதிகமான கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் செவிலியர்களுக்கும் இந்த மருந்துகள் பரிசோதிக்கப்பட உள்ளன. இதனிடையே, ஆயுஷ் மருந்துகளின் பயன்பாடு, அதற்கான பலன் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை பெறுவதற்காக சஞ்சீவினி என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.