கோவிட் 19 தொடர்பான மூன்றாவது ஊரடங்கின் இடையே சில தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அனைத்து சினிமா அரங்குகள், பள்ளிகள், வணிகவளாகங்கள், பொழுதுபோக்கு விளையாட்டுத் திடல்கள், மது அருந்தும் பார்கள் போன்றவை மூடப்பட்டிருக்கும். ஆனால் ஆன்லைன் வகுப்புகள், சமூக இடைவெளியுடன் கல்வி தொடர்பான பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரவு ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை மக்கள் வீதிகளில் நடமாடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பகல் நேரங்களில் மக்கள் குறிப்பிட்ட பணிகளுக்காக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளது.பத்துவயதுக்குட்பட்ட குழந்தைகளும் 65 வயதுக்குட்பட்ட முதியவர்களும் சாலைகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் ஒருவரும் நான்கு சக்கர வாகனங்களில் இருவரும் மட்டும் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதர ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.