பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நாடு முழுக்க சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள், பருப்பு வகைகளை இலவசமாக வழங்குவதற்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார சங்கடங்களை ஏழைகள் எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் இத்திட்டம் அமல்படுத்தப் படுவதாக தெரிவித்தார். அதிகரித்து வரும் தேவைகளை சமாளிப்பதற்கு ஏற்ற அளவில் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், கொள்முதல் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து வருவதாகவும் பாஸ்வான் குறிப்பிட்டார்.