ஜார்கண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட வகை பான் மசாலா பொருட்களுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு நிறுவனங்களின் பான் மசாலாவின் 41 மாதிரிகளை சேகரித்து, அவற்றில் மெக்னீசியம் கார்பனேட் என்ற வேதிப்பொருள் உள்ளதா என சோதித்துப் பார்த்துள்ளனர்.
இது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். எனவே இந்த மாதிரிகளில் குறிப்பிட்ட வேதிப்பொருள் காணப்பட்ட 11 நிறுவனங்களின் பான் மாசாலாவிற்கு ஒரு வருடத்திற்கு தடை செய்வதாக அரசு அறிவித்துள்ளது.