கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நியாயமானதாக இருக்கவேண்டும் என்றும் விலைக்குறைப்பு சரியான தீர்வல்ல;
நியாயமான விலையே பொறுப்புடையது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பேசிய அவர், இந்தியா மிகப் பெரிய எண்ணெய் நுகர்வு நாடாகும் என்றும் நியாயமான விலையைக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். எரிவாயு பரிமாற்றத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த எரிபொருளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய எரிவாயுக் கொள்கை கொண்டுவரப்படும் என்றார்.