இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிர்ப்பலி, ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது. இருந்த போதிலும் நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா ஒருசில மாநிலங்களில் கட்டுக்குள் வந்தாலும், வேறு சில மாநிலங் களில், வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த
மத்திய சுகாதாரத்துறை, பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு உயிரிழப்பு, 694 ஆக உயர்ந்தது.
குஜராத்தில் கொரோனாபாதிப்பு 7ஆயிரத்தை கடக்க, டெல்லியில் 6 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஒரே நாளில் 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி விட்டது.
ராஜஸ்தானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஐ நெருங்க, பலி எண்ணிக்கை சதத்தை எட்டியது.
மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 3 ஆயிரத்து 200 ஐ தாண்ட, உத்தர பிரதேசத்தில் 3 ஆயிரத்தை தாண்டி விட்டது,
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 887 ஆக உயர, தெலங்கானா வில் வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 100 ஐ தாண்டி விட்டது.
ஜம்மு - காஷ்மீரில் பாதிப்பு 793 ஆக உயர, கர்நாடகாவில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 753 ஆனது.
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 548ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 600 ஐ தாண்டி உள்ளது.
கொரோனாவால் ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், தமிழகம் உள்பட 11 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, 3 ஆயிரத்து 390 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு
எண்ணிக்கை 57 ஆயிரத்து 240 ஆக உயர்ந்தது. வைரஸ் தொற்றுக்கு இரை ஆனோர், எண்ணிக்கை ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது.
37 ஆயிரத்து 916 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், சுமார் 17 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதனிடையே, நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.