நாட்டின் 216 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலர் லாவ் அகர்வால், 42 மாவட்டங்களில் 28 நாள்களாக புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றார்.
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமாவோரின் சதவீதம் 29 புள்ளி 36 சதவீதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
5 ஆயிரத்து 231 ரயில் பெட்டிகள், ரயில்வேயால் கொரோனா சிகிச்சைக்கான வார்டாக மாற்றப்பட்டுள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்ட 215 ரயில்நிலையங்களில் அது நிறுத்தப்பட்டு, லேசாக பாதிக்கப்பநாட்டில் 216 மாவட்டங்களில்ட்டோருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுமென்றும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.