விசாகபட்டினத்தில் விஷவாயுகசிந்து 11 பேர் பலியான சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு முதல்கட்டமாக 50 கோடி ரூபாயை உடனடியாக செலுத்தும்படி எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விசாகபட்டினத்திலுள்ள எல்ஜி பாலிமர்ஸ் நிறுவன ரசாயன ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் விஷ வாயு கசிவில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உடல்நிலை பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக வழக்கெடுத்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற விசாரணையின்போது, எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.