தொழிலாளர் சட்டத்தில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்கத் தொழில் நடவடிக்கைகளைப் பழைய நிலைக்குக் கொண்டுவர உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காகத் தொழிலாளர் நலச்சட்டத்தில் ஒருசிலவற்றைத் தவிர மற்றவற்றில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்களிக்க ஓர் அவசரச் சட்டம் கொண்டுவந்து அதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அவசரச் சட்டம் ஏற்கெனவே உள்ள நிறுவனங்கள், புதிதாகத் தொடங்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் பெண்கள், குழந்தைகள் தொடர்பான சட்டப் பிரிவுகள், கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம், கட்டுமானத் தொழிலாளர் சட்டம், கூலிச் சட்டம், தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் ஆகியன தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.