விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் நேற்று மாலை மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டதாக வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.
விசாகப்பட்டினம் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் பழுதான வால்வின் காரணமாக வியாழன் நள்ளிரவு எற்பட்ட விஷவாயு கசிவிற்கு 11 பேர் பலியாகினர்.
1000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சம்பந்தப்பட்ட கண்டெய்னரை கட்டுப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப ரீதியிலான மிகச்சிறிய கசிவு நடத்தப்பட்டது என்றும், அது விபத்து இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன் மேலும் எந்த அசம்பாவிதமும் நிகழாதவாறு தடுக்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு கழக நிபுணர்களும் அங்கு முகாமிட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.