தொழிலதிபர் ரத்தன் டாட்டா, 18 வயது இளைஞரின் மருந்து விற்பனை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
அர்ஜுன் தேஷ்பாண்டே என்கிற இளைஞர் ஜெனரிக் ஆதார் என்னும் மருந்து விற்பனை நிறுவனத்தை 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் தயாரிப்பாளர்களிடம் இருந்து மருந்துகளை வாங்கிச் சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக நுகர்வோருக்கு வழங்குகிறது.
புற்றுநோய்க்கான மருந்துகளைக் குறைந்த விலைக்கு விற்கத் திட்டமிட்டு அதற்காக 4 மருந்து நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துள்ளது. இதனால் சந்தை விலையைவிட 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடுவரை குறைந்த விலையில் மருந்துகளை விற்க முடியும்.
மும்பை, புனே, பெங்களூர் ஆகிய நகரங்களில் 30 கடைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் குஜராத், தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரம் கடைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஜெனரிக் ஆதார் நிறுவனத்தில் தொழிலதிபர் ரத்தன் டாட்டா முதலீடு செய்துள்ளார்.