ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதத் செயல்களை நடத்துவது பாகிஸ்தானின் புதிய பயங்கரவாத குழுவான The Resistance Front என தெரிய வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தலையிடவில்லை என உலக நாடுகளை நம்ப வைக்கும் விதமாக இந்த பயங்கரவாத குழு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கரே தொய்பாவின் முன்னணி தீவிரவாதிகள் இந்த புதிய குழுவை கையாளுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத செயல்கள் உள்ளூர் மக்களால் நடத்தப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விஷமப் பிரச்சாரம் செய்யும் முறையை பிரதமர் இம்ரான் கான் கையில் எடுத்துள்ளார். இந்த செயலில் அவருக்கு உதவ ராணுவத்தில் பணியாற்றிய ஊடகத்துறையினர் நியமிக்கப்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.