கடன் பெற்றவர்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தில் 15 அடிப்படை புள்ளிகளை குறைப்பதாக, பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் , வருமனமின்றி தவித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எஸ்பிஐ வங்கியின் ஆண்டிற்கான வட்டி விகிதம் 7 புள்ளி 4 சதவீதத்திலிருந்து 7 புள்ளி 25 சதவீதமாக குறைந்துள்ளது.
மே 10ந் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த அறிவிப்பின் மூலம், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வைப்பு தொகைக்கான வட்டி விகிதமும் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது.