பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவீத மாணவர்களே வகுப்புகளில் இருக்கும் வகையில் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்த திட்டமிடப்படுகிறது.
டெல்லியில் சாலைகளில் ஒற்றை இரட்டை இலக்க போக்குவரத்தை நடத்தியது போல், வகுப்பறைகளிலும் இந்த முறையைப் பின்பற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேசிய கல்வி , ஆய்வு மற்றும் பயிற்சி மையமான NCERT இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.
அடுத்த வாரத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளுக்கான சமூக இடைவெளியுடன் கூடிய கல்வி தொடர்பான விதிமுறைகளை அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கல்வியில் சமரசம் செய்யாமல் அதே வேளையில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு கல்வித்துறை சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்