அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலைக் கட்டுமானப் பணிகளுக்காக 15 லட்சம் கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் பேசிய அவர், வர்த்தகம் என்பதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது பொதுவானது என்றும், தொழில்துறையினர் வர்த்தகத்தில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். உலகச் சந்தையில் போட்டியிடக் கூடிய அளவிற்கு திறமையை வளர்த்துக் கொள்ள புதுமை, தொழில்நுட்பம், ஆராய்ச்சித் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.