நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் விதிமுறைகளுக்கு உள்பட்டு, காணொலி மூலம் நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கொரோனா தாக்குதல் சூழ்நிலை குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றியும், நாடாளுமன்றக் கமிட்டிகளின் கூட்டங்களை நடத்துவது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் விதிமுறைகளுக்கு உள்பட்டு, காணொலி மூலம் நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தை நடத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை ஆராயுமாறு இரு அவைகளின் செயலாளர்களையும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.