ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் 9 கைக்குழந்தைகள் உட்பட 363 பயணிகளுடன், அபுதாபியில் இருந்து புறப்பட்ட முதல் இரண்டு விமானங்கள் கேரளாவை வந்தடைந்தன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், விமான சேவை முடங்கியதால் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அவர்களை மீட்கும் நோக்கில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இயக்கப்பட்ட, ஏர் இந்தியா விமானங்களில் ஒன்று கொச்சியையும், மற்றொன்று கோழிகோட்டையும் வந்தடைந்தது. தொடர்ந்து, பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.