கர்நாடகத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல 13 சிறப்பு ரயில்களை இயக்கும்படி ரயில்வேதுறையை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கர்நாடகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளைச் செய்யும் அதிகாரியான மஞ்சுநாத் பிரசாத், ரயில்வே துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், மே 8 முதல் 15 வரை பல்வேறு மாநிலங்களுக்கு 13 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
தொழிலாளர்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய 9 மாநிலங்களுக்குக் கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. பீகார், மத்தியப் பிரதேச அரசுகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.