விசாகப்பட்டினம் எல்ஜி வேதி ஆலையை மூட வேண்டும் என்றும், நச்சுவாயுக் கசிவு பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்குச் சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சிறப்பு மருத்துவர்களை அழைத்து வந்து பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கருவிகள் மூலம் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் துல்லியமாக அளவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.