பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ராஜஸ்தான் மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பார்மர், ஜலோர், ஜெய்சல்மீர், ஜோத்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் கம்பு, சோளம் மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்களைப் பயிரிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து இந்தப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. 26 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு மே மாதத்தில் இதுபோல் வெட்டுக்கிளிகள் படையெடுத்துவந்து பயிர்களை அழித்தன. இந்த ஆண்டு 4 மாவட்டங்களிலும் ஒன்றரை லட்சம் எக்டேர் பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
வெட்டுக்கிளிகளின் முதன்மை இலக்கான சீரகப் பயிரை ஏற்கெனவே அறுவடை செய்து விட்டதால் விவசாயிகள் பேரிழப்பில் இருந்து தப்பியுள்ளனர். அதே நேரத்தில் மற்ற பயிர்கள் அழிந்து வருவது அவர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.