நாடு தழுவிய ஊரடங்கு கடந்த 44 நாட்களாக அமலில் உள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆயிரத்து 610 கோடி ரூபாய்க்கான நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
தொழில் இழந்து வருமானம் இன்றி பாதிக்கப்பட்டிருக்கும் சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ ரிக்சா ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், சவரத் தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.சிறுதொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாலும் அவை இயல்புக்குத் திரும்ப மேலும் சில மாதங்களாகும் என்பதாலும் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான மின்கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் எடியூரப்பா அறிவித்துள்ளார். விவசாயிகள், பூ விற்பவர்கள்,நெசவாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கும் பலவகை நிவாரண உதவிகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.