லண்டன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவுக்கு நாளை முதல் ஏர் இந்தியா விமானங்களில் செல்ல முன்பதிவு தொடங்கியுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் இருந்து அபுதாபிக்கும் டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கும் , கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கும் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கு முன்பதிவு செய்ய இணையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஏர் இந்திய விமானத்தின் விமானிகள், பணிப்பெண்கள் உள்ளிட்டோருக்கு கொரோனோ சோதனை நடத்துவதால் இன்று இயக்கப்பட இருந்த விமானங்களில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.