குஜராத்தில் கொரோனா தொற்று மிகவேகமாகப் பரவி வருகிறது. இதனால் அகமதாபாதில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருந்துக் கடைகள். பால் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்துக் கடைகளையும் அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காய்கறிகள்,மளிகைப்பொருட்கள் வாங்குவதற்கு சாலைகளில் மக்கள் திரண்டு வருவதால் கொரோனா வேகமாகப் பரவுவதாக குஜராத் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் காய்கறி, மளிகைக் கடைகள் உள்படஅனைத்து கடைகளும் மூடப்படுகின்றன. ஸ்விகி, ஜோமாட்டோ , டாமினோஸ் போன்ற வீட்டு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்களாலும் கொரோனா பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் மருந்து பால் தவிர மற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.