கடந்த 50 ஆண்டுகளாக மனிதர்களைத் தாக்கிய பெரும்பாலான நோய்க்கிருமிகள், காடுகளை அழித்ததால் வந்தவையே எனச் சுற்றுச்சூழலியலாளர் வந்தனா சிவா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் சுற்றுச்சூழல் சீர்கெடாமல் காக்கக் காடுகள், வேளாண்மை, மக்களின் உடல்நலம் ஆகியவற்றுடன் பின்னிப்பிணைந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் அடைந்துள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டைத் தக்க வைப்பதற்கு ஒரு பரப்புரையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளாக மனித குலத்தைப் பாதித்த முந்நூற்றுக்கு மேற்பட்ட நோய்க்கிருமிகள் காடுகளை அழித்ததன் விளைவாகத் தோன்றியவை எனவும் வந்தனா சிவா குறிப்பிட்டார்.
காடுகளுக்குள் மனிதன் ஊடுருவிச் சுற்றுச்சூழலை அழித்ததன் விளைவாகவே எபோலா வைரஸ், சார்ஸ், மெர்ஸ் ஆகியவை தோன்றியதாகத் தெரிவித்தார். காட்டின் சூழலில் மனிதனின் ஊடுருவலால்தான் கொரோனா வைரசும் தோன்றியதாகக் குறிப்பிட்டார்.