கார் வாங்க இணையத்தளத்தில் ஆர்டர் கொடுத்தால் வீட்டிலேயே கொண்டுவந்து காரை வழங்குவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்திக் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாருதி சுசுகி நிறுவனமும் தனது விற்பனையகங்களைத் திறக்க அனுமதித்துள்ளது.
ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு முதலில் வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, இணையத்தளத்தில் ஆர்டர் செய்தால் வீட்டிலேயே கொண்டுவந்து காரை வழங்குவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
கார் தொழிற்சாலை, விற்பனையகங்கள், பணிமனைகள் ஆகியவற்றில் கை தொடும் இடங்களில் எல்லாம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுத் தூய்மையாகப் பராமரிக்கப்படுவதாக மாருதி சுசுகி மேலாண் இயக்குநர் கெனிச்சி அயுக்கவா தெரிவித்துள்ளார்.