கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைத்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், 3 வருடம் வரை சிறைத்தண்டனையும் விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பலர் தொற்று ஏற்பட்டதை மறைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தியதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதை அடுத்து இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதே போன்று நோய் தடுப்புக் காவலில் இருந்து தப்பிச் செல்பவர்களுக்கு ஒரு வருடம் முதல் 3 வருடங்கள் வரை சிறையோ, 50000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதமோ விதிக்கப்படும் எனவும் அவசரச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.