கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் 30 க்கும் மேற்பட்ட ஆய்வுகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான அரசு அமைத்துள்ள நடவடிக்கை குழுவின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது இதை தெரிவித்த விஞ்ஞானிகள் சில தடுப்பூசி ஆய்வுகள் சோதனை கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகள் ஒருபுறம் இருக்க, இப்போதுள்ள மருந்துகளை கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் மாற்றம் செய்வதற்கான ஆய்வுகளும் நடப்பதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
இரண்டவதாக கொரோனாவுக்கு புதிய மருந்தை கண்டுபிடிப்பதிலும், மூன்றாவதாக இயற்கை மூலிகைச் சாறுகளின் ஆன்டிவைரல் குணங்களை பயன்படுத்தி கொரோனாவுக்கு மருந்து கண்டபிடிப்பதிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும் விஞ்ஞானிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.