ஜம்மு-காஷ்மீரில் தலைக்கு 12 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் ரியாஸ் நைகூ பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டான்.
பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய அவன் குறித்து துப்புக் கொடுத்தால் 12 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவந்திபோரா பகுதியில் ரகசியத் தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த ரியாஸ் கைது செய்யப்பட்டான்.இதேபோல் இன்னொரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ரியாஸ் நைகூ, காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளான். அவனது கைது, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கூறப்படுகிறது.