புகைப்பட உலகின் நோபல் பரிசு என வர்ணிக்கப்படும் புலிட்சர் விருது இந்தியாவைச் சேர்ந்த 3 புகைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
காஷ்மீரைச் சேர்ந்த தார் யாசின், முக்தார் கான் மற்றும் சன்னி ஆனந்த் ஆகியோருக்கு இந்த விருது வாங்குவதற்காக அமெரிக்காவின் அசோசியேட் பிரஸ் நிறுவனம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரை 2 ஆகப் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் முடக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையும், அன்றிருந்த நடைமுறையையும் யதார்த்தமாக களநிலவரத்துடன் படம் பிடித்ததற்காக மூவருக்கும் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருமைமிகு புலிட்சர் விருதை வென்ற 3 புகைப்படக்காரர்களுக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.