வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும் இந்தியர்கள் கட்டாயம் கோவிட் 19 பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
64 விமானங்கள் மூலம் சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில் பரிசோதிக்கப்படாமல் இந்தியர்களை அழைத்து வருவது மிகப்பெரிய ஆபத்தாக முடிந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.
விமானத்தில் ஏறும் முன்பு கட்டாயம் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை நடத்துவதுதான் பாதுகாப்பானது என்றும் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.ஒருவிமானத்தில் 200 பேர் அழைத்து வரப்படும் நிலையில் இரண்டு பேருக்கு கொரோனோ பரவியிருந்தாலும் அது அனைத்துப் பயணிகளையும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் கேரள முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.