மகாராஷ்ட்ரா மேலவைத் தேர்தலில் ஆளும்கட்சிக் கூட்டணி 9 இடங்களில் 5 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
288 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் மகா விகாஸ் அகாடி என்ற ஆளும் கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு 169 பேர் ஆதரவு உள்ளது.சிவசேனாவுக்கு 56 உறுப்பினர்களும் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் காங்கிரசுக்கு 44 இடங்களும் உள்ளன.
இதர கட்சிகளின் 15 உறுப்பினர்களும் அரசுக்கு ஆதரவளித்துள்ளன. வருகிற 21ம் தேதி சட்டமன்றத்தின் காலியாக உள்ள 9 மேலவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் சிவசேனா தலைமையிலான அணிக்கு 5 இடங்களும் பாஜகவுக்கு 4 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் உத்தவ்தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.