ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறந்ததை எதிர்த்துப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் தொழிலகங்கள், கடைகள், உணவகங்கள் கூட இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. அதற்குள் சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதைக் கண்டித்து விசாகப்பட்டினத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மதுக்கடைகளை மூட வலியுறுத்தினர்.
போராட்டத்தின்போது பேசிய பெண் ஒருவர், காய்கறிச் சந்தையை ஒருநாளைக்கு 3 மணி நேரமே திறக்க விடுவதாகவும், மதுக்கடைகளை 7 மணி நேரம் திறந்து வைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.