அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் சுமார் 14ஆயிரத்து 800 பேர், 64 விமானங்களில் அழைத்து வரப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் 64 விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட இருப்பதாக தெரிவித்தார்.
எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை விமானங்கள் இயக்கப்படும் என்ற பட்டியலை வெளியிட்ட அவர், விமானங்களில் திரும்பி வருவோர் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இதற்காக குறிப்பிட்ட கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து திருப்பி அழைத்து வரப்படும் இந்தியர்கள் 14 நாள்கள் தனிமைபடுத்தப்படுவர் என்றும் மத்தியமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.