மதுவகைகளை வீட்டுக்கே சென்று வழங்குவதற்கான இணையத்தளத்தைச் சத்தீஸ்கர் அரசு தொடங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
மாநிலச் சந்தைக் கழகத்தின் சிஎஸ்எம்சிஎல் இணையத்தளத்திலோ, மொபைல் ஆப்பிலோ ஆதார் எண், செல்பேசி எண், முகவரி ஆகியவற்றைப் பதிந்து ஆர்டர் கொடுத்து விட்டால் வீடுதேடிச் சென்று மது வழங்கப்படுகிறது.
ஒருவர் ஒருமுறை 5 லிட்டர் வரை மதுவகைகளுக்கு ஆர்டர் வழங்கலாம். கொண்டுசென்று வழங்குவதற்கான கட்டணமாக 120 ரூபாய் பெறப்படும்.
மது வாங்குவதற்காக மக்கள் கடைக்கு வருவதையும், தெருக்களில் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க முடியும். மதுவை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், இணையத்தளத்தில் மது விற்பது வெட்கக்கேடானது எனத் தெரிவித்துள்ள பாஜக, இதைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரியுள்ளது.