கொரோனா தொற்று பாதித்தவர்களின் அபாய கட்டத்தில் உதவிகரமாக இருக்கும் என அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ரெம்டெசிவர் (Remdesivir) மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சி முதற்கட்ட வெற்றியை பெற்றுள்ளது.
KSMs எனப்படும் இந்த மருந்துக்கான முக்கிய வேதிப் பொருள்களை ஐதராபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி (Indian Institute of Chemical Technology) வெற்றிகரமாக தொகுத்துள்ளது.
சிப்லா உள்ளிட்ட மருந்து தயாரிப்பாளர்களிடம் இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெம்டெசிவரை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய அதன் காப்புரிமையை வைத்துள்ள Gilead Sciences நிறுவனத்திடம் அனுமதி கோரப்படும் என்று அது கிடைக்கவில்லை என்றாலும் கட்டாய உரிமை பெறும் சட்டத்தின் கீழ் அது உற்பத்தி செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன