ஊரடங்கிற்குப் பிறகு பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டுமானால், அரசு மக்களுக்கு நேரடியாக பண உதவி செய்ய வேண்டும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் நடத்திய காணொலி விவாதத்தில் அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்தது போல மிகப்பெரிய நிவாரண நிதித் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
வங்கிக் கடன்களுக்கு 3 மாத கால சலுகை அளித்துள்ளதை பாராட்டிய அவர், இந்த 3 மாத காலத்திற்கான தொகையை ரத்து செய்து அதை அரசே ஏற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.