கொரோனா தடுப்புக்கான, "தனி மனித இடைவெளி", கூட்டமாக கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கடைபிடிக்கத் தவறினால், மீண்டும், தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும், என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
நேற்று முதல், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக, தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் சுற்றி வருவது, வேதனையளிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.