ஆகஸ்ட் ஒன்று முதல் 25-ம் தேதிக்குள்ளாக பொறியியல் & தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகார நீட்டிப்பு வழங்கும் தேதி ஜூன் 15 வரை நீட்டிக்கப்படுவதாகவும் இணைப்பு அந்தஸ்து வழங்கும் தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும் அவற்றை ஆன்லைனில் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2-ம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் ஒன்று முதல் வகுப்புகளைத் தொடங்கவும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிகளுக்கான சான்றிதழ்களை முதன்முறையாக நேரில் செல்லாமல், ஆன்லைனிலேயே சரிபார்த்து நீட்டிப்பு வழங்கும் முறைக்கு AICTE அனுமதி வழங்கி உள்ளது