மும்பையில் மே 17ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பித்திருப்பதுடன், தடையை மீறுவோருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் மே 4ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் நடைமுறைக்கு வந்தன.
இதனால் கட்டுப்பாட்டு மண்டலமாக இல்லாத பகுதிகளில் ஒருசில மதுக்கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் நெருக்கமாக நின்றனர். மக்கள் கூட்டமாகச் சேர்வதைத் தடுக்க வரும் 17ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாலை 7 மணி முதல் காலை 8 மணி வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறுவோருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.