கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்து 1,000 டோஸ்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் இந்த மருந்து தகுந்த பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தினை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் ரெம்டெசிவிர் கொடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறிப்பிட்ட மருந்தை இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்துக்கூறிய சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் சேகர் மண்டே, ரெம்டெசிவிர் மருந்தை இந்திய சந்தைக்கு கொண்டுவருவது தொடர்பாக அதற்கான காப்புரிமையை பெற்றுள்ள கிலியாட் சைன்சஸ் நிறுவனமே முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.