தனிமனித விலகலைக் கடைப்பிடிக்காவிட்டால் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் குறிப்பிட்ட பகுதியில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளாதால் அங்கு மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மது வாங்கச் செல்லுவோர் தனிமனித விலகலையும் பிற விதிமுறைகளையும் மதிக்காமல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் மதுவுக்கு சிறப்பு கொரோனா கட்டணமாக, அதன் விலையிலிருந்து 70 சதவீதம் வரி விதித்து மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மது விலை கணிசமாக உயரும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.