மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்தை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய மத்திய உள்துறை இணை செயலாளர் புண்ய சலிலா, மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறையை 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு சரக்கு ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அந்த கட்டுப்பாட்டு அறை 24மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டுமென மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.