பாகிஸ்தானால் ஏவி விடப்படும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்துக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எல்லையில் போர்நிறுத்தத்தை மீறுவது, பயங்கர வாதத்துக்கு ஆதரவளிப்பது எனப் பாகிஸ்தான் செய்யும் அனைத்துக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் கொள்கையைப் பாகிஸ்தான் கைவிடும் வரை, அதற்கு எதிராகச் சரியான முறையில் துல்லியத் தாக்குதல் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் பாகிஸ்தானின் முயற்சி, கொரோனாவுக்கு எதிரான போரில் அதற்கு அக்கறை இல்லை என்பதையும், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதிலேயே ஆர்வமாக உள்ளதையும் காட்டுவதாகக் ராணுவ தளபதி குறிப்பிட்டார்.