மேற்கு வங்கத்தில் தான் நாட்டிலேயே அதிக கொரோனா இறப்பு விகிதம் இருப்பதாக மத்திய அரசு சிறப்புக் குழுவினர் மாநில அரசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
கொரோனா தொற்று நிலைமையை ஆராய மத்திய அமைச்சரவை சிறப்புக் குழு மேற்கு வங்கம் சென்றது.
2 வார கால ஆய்வை முடித்து விட்டு டெல்லி திரும்பும் முன்னர் குழுவின் தலைவர் அபூர்வ சந்திரா, மாநில தலைமைச் செயலர் ராஜீவ சின்காவுக்கு அளித்த அறிக்கையில் , மேற்கு வங்கத்தில் இறப்பு விகிதம் 12.8 என்ற அதிகபட்ச அளவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தொற்று கண்காணிப்பு, சோதனை முறைகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளதை இந்த இறப்பு விகிதம் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறித்து மத்திய அasசுக்கு தகவல்கள் குறைத்து காட்டப்படுவதாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.